பிப்ரவரி 22 ,1994 . ஆஸ்திரேலியாவின் வடக்குப்பகுதியிலுள்ள டன்மாரா என்னும் சிற்றூரில் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது.அந்த ஊரின் பெயரிலேயே அங்கு ஹோட்டல் உண்டு.வெளியே கார் பார்கிங் அருகே வழக்கமான ஜனநடமாட்டம் இருந்தது. பொழுது சாயும் வேளையில், திடீரென்று அங்கு வானத்திலிருந்து மழை பொழிய ஆரம்பித்தது.
இதிலென்ன ஆச்சரியம் என கேட்கத்தான் தோன்றும். அது மழையல்ல மீன் மழை. ஆயிரக்கணக்கில் மீன்கள். முக்கால்வாசி வாலை ஆட்டியவாறு.
செய்தி பரவி மக்கள் ஓடி வந்து மீன்களை அள்ளிக் கொண்டு போனார்கள் சமைக்க!

ஒரு வாரம் கழித்து மீண்டும் மீன் மழை. முதலில் மூன்று அங்குல நீள மீன்கள். இம்முறை ஆறு அங்குலம்.
சாதாரணமாக வானிலிருந்து நாம்(குறிப்பாக சென்னை வாசிகள்) எதிர்பார்ப்பது மழை மட்டுமே. இது எப்படி நிகழ்ந்தது?.
சுமார் எண்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கவாழ் பத்திரிக்கையாளர் சார்லஸ் போர்ட் என்பவர் உலகத்திலுள்ள அவ்வளவாக விஞ்ஞானம் கண்டுகொள்ளா ஆச்சரியங்களை சேகரிக்க ஆரம்பித்தார். 1916 - 1932 வரை பல இடங்களுக்கு இது சம்பந்தமாக பயணித்தார். லண்டனிலும் நியூ யார்க்கிலும் உள்ள லைப்ரரியிலிருந்து பழைய நாளிதழ்களை கவனமாக படித்து ஆயிரக்கணக்கான அபூர்வ விசயங்களை அவரால் சேகரிக்க முடிந்தது. அதை அவர் பத்திரிகையில் தொடர்ந்து வெளியிட்டார் . பலர் இதனால் விசிறிகளானர். அவரது பெயரில் இன்றும் போர்டின் சங்கம் இயங்கி வருகிறது. என்சைக்ளோபீடியா(4 volume) அளவுக்கு சேகரித்த தகவல்களில் அதிக இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது வானிலிருந்து விழும் பொருட்களே.
மீன்கள் மட்டுமல்ல தவளைகள், பெரிய ஐஸ் பாறைகள், சில்லறை, குருவிகள், வாத்து, காய்கறி...... இப்படி கொட்டும் லிஸ்ட் நீளுகிறது!
1971ல் ஜோவோ பெஸ்னோ எனும் ஊரில் 4 லாரி அவரைக்காய் மழை பெய்தது. விழுவது எதுவாக இருந்தாலும், வேறு ஊரிலிருந்து புயலால் கொட்டக்கூடும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறினர். புயலெல்லாம் இல்லாமல் மேகங்கள் கூட இல்லாத வானிலிருந்து இப்படி கொட்டினால்? விஞ்ஞானிகள் தர்ம சங்கத்துடன் விழித்தார்கள்.
ஒரு வேளை விமானங்களிலிருந்து விழும் என்றார்கள். பல நேரங்களில் விமானங்கள் பறக்க வில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சில சமயங்களில் விமானங்களிலிருந்தும் விழுந்தன.
ஆக, ஏதோ ஒரு சக்தி வேறு எங்கிருந்தோ ஏதேதோ பொருள்களை கவர்ந்து கொண்டுவந்து குறிப்பிட்ட ஒரு இடத்தில் கொட்டுகிறது என்பது மட்டும் நிச்சயம். விமானங்களின் வேலையல்ல என்பதற்கு முக்கிய காரணம் விமானம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் இப்படி நடந்திருக்கிறது!
1800ல் ஐஸ் பாறை (யானை சைஸ்) கர்நாடகாவின் சீரங்க பட்டினத்தில் விழுந்துள்ளது. சார்லஸ் போர்ட் இதை விசாரித்துள்ளார். 1986ல் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதி கைரிபட் தீவுகளில் மீன் பிடிக்க சென்ற மூவர்கள் வழி தெரியாமல் மாட்டிக்கொண்டார்கள். 4 மாதங்களாக சுறாமீன் தவிர வேறு ஏதும் கிடைக்காததால் கடவுளிடம், 'சுறா அலுத்துவிட்டது வேறு ஏதும் தரமாட்டாயா?' என காமெடியாக பிரார்த்தனை செய்தார்கள். ஒரு மணி நேரம் கழித்து கருப்பு மீன் மழை! சுமார் 800 அடிக்குக் கீழே கடலில் கிடைக்கும் மீன்கள் அவை. அவர்கள் பின், அவைகளை சேகரித்த மீன்களைக் காட்டியவுடன் பார்த்தவர்களுக்கெல்லாம் ஆச்சரியம்.
எல்லா ஆச்சரியங்களுக்கும் முதல் வேலையாக பெயர் வைக்கிற வழக்கம் விஞ்ஞான உலகிற்கு உண்டு. அதற்கு ஒரு பெயர் வைத்தார்கள். FALTRASKY(Falls from the sky என்பதன் சுருக்கம்).
இந்த விண் ஆச்சரியம் அண்மைக்காலமாக நிகழ்கிற ஒன்றல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கிரேக்க அறிஞர் அதானாசியஸ், ஏதென்சில் மீன்மழை கொட்டியது பற்றி குறிப்புகள் எழுதியுள்ளார். பைபிளில் கூட Manna from Heaven பற்றி வருகிறது. பாலைவனத்தில் உணவில்லாமல் தவித்த யூதர்கள் பிரார்த்தனை செய்தவுடன் வானிலிருந்து உணவுப்பொருள்கள் கொட்டியது உண்மையாகவே நிகழ்ந்திருக்குமோ!
எரிகல் விஷயம் வேறு விண்வெளிகளில் பறக்கும் பாறைகளில் சில, பூமிக்கு மேல் பரவியுள்ள காற்றுமண்டலத்தை ஊடுருவிக்கொண்டு பூமிக்கு வந்து விடுகிற விபரீதம் அது. 1997 டிசம்பர் கொலம்பியாவில் ஒரு பெரிய எரிகல், பள்ளிக்கூடம் ஒன்றின் அருகே விழுந்ததில் 4 குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். ஆனால் FALTRASKYயால் இறக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அக்டோபர் 23, 1987, பிரிட்டனில், கிளைவுஸேஸ்டர்ஷையர் எனும் ஊரில் ரோஸ் கலர் தவளை மழை (உயிரோடு) பெய்தது. விஞ்ஞானிகள் ஆராய்ந்து பார்த்ததில் அவை ஆப்பிரிக்க தவளைகள்.
இரண்டு காரணங்கள் சொல்ல முடியும். இயற்கையான சக்தி(Natural) . இன்னொன்று இயற்கையை விஞ்சிய சக்தி(Super Natural). இயற்கையான காரணம் கீழேயிருந்து சுழல் காற்றினால் பொருள்கள் இழுக்கப்படுகிறது. இதற்கு ஏற்ப வானிலிருந்து விழும் சற்று எடையுள்ள பொருள்களை - உதாரணமாக பெரிய சைஸ் மீன்களை சோதித்ததில் அவை சுற்று வட்டாரத்தில் காணப்படுபவையாக இருந்தன. ஆனால், சூறாவளியால் இழுக்கப்பட்டு பல நாட்கள் உயிரோடு இருப்பதுதான் ஆச்சரியம். இதுவே விஞ்ஞானிகளுக்கு நெத்தியடியாக உள்ளது.
இயற்கையை விஞ்சிய சக்தி என ஒப்புக் கொண்டால் மர்மம் விடுபடுகிறது. அந்த சக்திதான் Teleporation.சுருக்கமாக, ஒரு பொருள் ஓரிடத்தில் மறைந்து போய் திடீரென்று இன்னொரு இடத்தில் தோன்றுவது. அதற்கேற்ப பிரிட்டனில் விழுந்த ஆப்பிரிக்கத் தவளைகளும் சரி, மீன் மழையும் சரி, ஏதோ குப்பை லாரியிலிருந்து மொத்தமாக விழுவது போல் இல்லாமல் தண்ணீரில் அங்குமிங்குமாக மிதந்து கொண்டிருக்கிற அதே நிலையில்தான் விழுகின்றன.
Teleportation தியரிப்படி, ஒரு பொருள் மனிதனாக இருந்தாலும், அணுக்களாக விடுபட்டுக்கரைந்து இன்னோர் இடத்தில் ஒன்று சேர்ந்து மீண்டும் அதே பொருளாகிறது. இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
1957, ஜூலை 30, US ல் பென்சில்வேனியாவில் விழுந்த பெரிய சைஸ் ஐஸ் கட்டி உருண்டைகள் தலை சுற்றவைத்தன. அவற்றை சோதித்து பார்த்ததில் ஒரு வித உப்பு கலந்திருந்தது. அனால் வானிலிருந்து விழும் ஐஸ் கட்டிகளில் நைட்ரேட் இருக்கும்.
1985-1991ல் FALTRASKY யை பற்றி ஆராய்ச்சி செய்தவர் லூயி ஃபிராங்க். அவர் கருத்து என்னவென்றால், " விண்வெளியிலிருந்து எரிகற்கள் மட்டும் பூமியை நோக்கி வருவதில்லை. அவை தவிர ஐஸ் கட்டி உருண்டைகளும் மழையாக பொழிகின்றன. காற்று மண்டலத்தில் உராயும்போது நீர்த்திவலையாக மாறுகின்றன. பூமியை சுற்றிலும் காற்று மண்டலத்தில் உள்ள ஈரப்பதத்துக்குக் காரணமான இந்த ஐஸ் கட்டிகள் அகண்ட கண்டத்தில் வெகு தொலைவிலிருந்து வருபவை. பூமியில் இத்தனை உயிரினங்கள் தோன்றக் காரணமான நீரும் காற்று மண்டலத்திலுள்ள ஈரத்தனமையும், விண்வெளியின் கற்பனை செய்யமுடியா தொலைவிலிருந்து வரும் அந்த ஐஸ் கட்டிகளால்தான் உருவாயின. அதில் சில ஐஸ் கட்டிகள் உடையாமல் சிதறாமல் காற்று மண்டலத்தில் புகுந்து பூமியில் விழுகின்றன!" .
இந்த கருத்து விஞ்ஞானிகளிடையே சலசலப்பை உண்டாக்கியது. அப்படியென்றால், பூமிக்குத் தேவையான அடிப்படை தண்ணீர் சப்ளையை அகண்ட கண்டத்தில் வெகுதொலைவிலிருந்து அனுப்புகிறார்கள் என எடுத்துக் கொள்ளலாமா?
ஆனால் தவளை, மீன், சில்லறை( பிரிட்டனில் மான்செஸ்டர் அருகே செயின்ட் எலிசபெத் தேவாலயத்துக்கு அருகே மே 28,1981ல் சில்லறை (Pennies) மழை பெய்தது. இதற்கு பாதிரியார் க்ரஹாம் மார்ஷலுக்கு கிடைத்த இரண்டு பவுண்டு நாணயங்கள் சான்றாகின்றன.) போன்ற மர்மங்களுக்குத்தான் இன்னும் விடைகான முடியவில்லை .
Reference: மனிதனும் மர்மங்களும் - மதன்.

No comments:
Post a Comment