சாமணத்தில் மாட்டிய கமுகு விதை
பேருந்தில் செல்லும் பெண்!
என் அணங்கு மகள் நாளை?
அச்சத்தில் கண்ணுகுக்கிறது மனம்.
கையடக்கம் அதனுள் அடக்கம்
அடக்கம் அலைபேசிக்கு மட்டும்
ஒழுக்கம் தகர்ந்தது அடக்கத்துள்.
படிக்கிறாள் ஈட்டுகிறாள் இறும்பூதாதே
விடியற்காலையில் விழிக்காத பெண்.
வியர்வை பூத்தக் காசில்
சிருங்காரச் செலவுகள்.
வதுவைக்கென்ன அவசரம்
வயதுக்கு வருவதற்குள்!
மைதுனம் நோக்கும் மையல்
காதல் பின் கருக்கலைப்பு!
வௌவியம் தோற்றது வாசெலினிடம்.
இறுதிவாய்ப்பென பற்றிக்கொண்டீர்
வந்தேறியவனின் பண்பாட்டை.
தூக்கிவிட ஆளில்லை!
'அடி'த்தவனையல்ல அடிபட்டவனை
இருக்கிறது பதவியில்
மதுக்கடையும் சாதிச்சங்கமும்.
கற்பளித்தது கற்பழிக்கிறது
மசக்கையல்ல அரச பிளவை;
விழவிருக்கும் வெம்பிய காய்.
புண்பட்டது பண்பாடு
விழுப்புண்ணல்ல அழுகிவிட்டபுண்!
சிரிக்கியில்லனா கிறுக்கி பண்பாடே
பண்படு.
--------------------------------------------------
இப்படைப்பானது என்னால் "வலைப்பதிவர் திருவிழா - 2015" மற்றும் "தமிழ் இணையக் கல்விக்கழகம்" நடத்தும் "மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015"க்காக "வகை 4 - புதுக்கவிதைப் போட்டி" என்ற பிரிவில் எழுதப்பட்டுள்ளது.
இப்படைப்பானது வேறெங்கும் வெளியானதல்ல, முடிவு வெளிவரும் வரை வேறெதிலும் வெளிவராது என உறுதியளிக்கிறேன்.
ச.நடராஜன்.
வணக்கம் நண்பரே!! தங்கள் தளத்திற்கு புதியவன்!! அருமையான நெத்தியடி கவிதை வாழ்த்துக்கள்
ReplyDelete