Saturday, October 8, 2016

கீழ் அடி உலகம்


என் முந்தையவர்கள்
அறியாமையில் அமிழ்ந்திருக்கையில்
பாடஞ்சொல்ல கடமைப்பட்டு
தென்னைவேர்களின் சகாயத்துடன்
இளநீராய் பாமரனின்
மூளை தொட முற்பட்டு
வயிறிரங்கி வெளியேறித் தவித்திருப்பினும்
காட்சியாகவே வெளியேறிவிட்டமையால்
இப்போது மீண்டும் புதைக்கப்படுகையில்
முகம் சிரித்திருந்தன
எம் மூத்தக்குடிகளின் நினைவலைகள்!


1 comment:

  1. அலோ மைக் டெஸ்டிங் ஒன் டூ திரீ

    ReplyDelete