Saturday, October 8, 2016

கீழ் அடி உலகம்


என் முந்தையவர்கள்
அறியாமையில் அமிழ்ந்திருக்கையில்
பாடஞ்சொல்ல கடமைப்பட்டு
தென்னைவேர்களின் சகாயத்துடன்
இளநீராய் பாமரனின்
மூளை தொட முற்பட்டு
வயிறிரங்கி வெளியேறித் தவித்திருப்பினும்
காட்சியாகவே வெளியேறிவிட்டமையால்
இப்போது மீண்டும் புதைக்கப்படுகையில்
முகம் சிரித்திருந்தன
எம் மூத்தக்குடிகளின் நினைவலைகள்!


Friday, January 15, 2016

Sugarcane Harvesting


      கரும்பை பற்றி




        அறிவியல் பெயர் Saccharum Officinarum.
        முதன்முதலாக நியூ கினியாவில் பயிரிடப்பட்டது.
        கரும்பு உற்பத்தியில் பிரேசில், இந்தியா,சைனா ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.
        கரும்பில் 63-73 % தண்ணீரும், 12-16 % சர்க்கரையும், 11-16 % நார்ச்சத்தும், அயான்,கால்சியம்,பொட்டாசியம்,சோடியம் ஆகிய மினரல்களும்  உள்ளது.
        பன்முக உபயோகம் கொண்டதாக உள்ளது.

     எங்கள் வயல் கரும்பு அறுவடை
         சித்திரையில் பயிரிடப்பட்டு தை க்கு முன் (10 மாதம்) எங்கள் வயலில் கரும்பு அறுவடை செய்யப்பட்டது.
   
     படிநிலை 1    தோகை அகற்றுதல் 
               
   


         15 நாட்களுக்கு ஒருமுறை தோகை அகற்றப்பட வேண்டும். அதுபோல கரும்புவெட்டுவதற்கு முன்பும் தோகை அகற்றப்பட வேண்டும்.                                                                                                                                                                                                              கடைசியாக  அகற்றிய தோகை தண்ணீர் தெளித்து கரும்பு கட்டுவதற்கு பயன்படுத்தப் படுகிறது.

    படிநிலை 2   கரும்பு வெட்டுதல் 
         




          வெட்டுவதற்கு தேவையான ஈரத்திற்கு தண்ணீர் விடப்படுகிறது. பின் கரும்புகள் ஒவ்வொன்றாக வேருடன் வெட்டி எடுக்கப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்படுகிறன. 

   படிநிலை 3  கரும்பு ராட்டுதல் 
                         


         வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட கரும்புகளின் வேரிலுள்ள மண் செதுக்கப்படுகிறது. 

  படிநிலை 4   தரம் பிரித்தல் 
       
        அவை யாவும் கூலக்கரும்பு அல்லது  சச்சுக்கரும்பு அல்லது கல்சரைக் கரும்பு மற்றும் தரமான கரும்பு என இரண்டாக தரம் பிரிக்கப்பட்டு கட்டுமிடத்தின் அருகில் குவிக்கப்படுகிறது. 

  படிநிலை 5   கரும்பு கட்டும் அமைப்பை  உருவாக்குதல் 

       மூன்று பெரிய உருளைக் கட்டைகளும் ஆறு அச்சுக் கம்புகளும் கொண்ட இந்த அமைப்பானது படத்தில் கண்டவாறு அமைக்கப்படுகிறது. 

   படிநிலை 6  கரும்பு கட்டுதல் 
        கட்டுக்கு பத்து கரும்புகள் வீதம் கட்டப்படுகிறது. 
   1 - குவிக்கப்பட்ட தரமான கரும்புகளிலிருந்து மூன்று கரும்புகள் முதலில் வைக்கப்படுகிறது.

           



   2 - அதே மாதிரியான இரண்டு கரும்புகள், முன் வைக்கப்பட்ட கரும்புகளின் இருபக்க ஓரத்திலும் வைக்கப்படுகிறது. 


   3 - அதன் இடையில் இரண்டு கூலக் கரும்புகள் வைக்கப்படுகிறது. 


   4 - அதன் மேல் மூன்று தரமான கரும்புகள் வைக்கப்படுகிறது. 



   5 - வேரிலிருந்து தோகை வரை 4 அல்லது 5 இடத்தில் கரும்பு தோகையால்
கட்டப்படுகிறது. கட்டும்போது தொகையை உள்ளழுத்த சிறிய செதுக்கிய கோல் பயன்படுத்தப்படுகிறது.






   6 - பின் தூக்கப்பட்டு அருகில் அடுக்கி வைக்கப்பட்டு மூடிவைக்கப் படுகிறது. 



    படிநிலை 7 ஏற்றுமதி 
        
       அடுக்கி வைக்கப்பட்ட கரும்புக் கட்டுகள் எண்ணிக்கையுடன் வியாபாரிக்கு அளிக்கப் படுகிறது.      




         கரும்பு  வியாபாரம் 
         
            ஓர் விவசாயி ஏன் நேரடியாக கரும்பு வியாபாரத்தில் இறங்கக் கூடாது? இந்த சந்தேகம் பலருக்கு எழலாம். சில  விவசாயிகள் இதனை செய்கிறார்கள். துணிந்தவர்கள் செய்யலாம். ஆனால் எல்லா நேரமும் வெற்றி கிட்டுமென சொல்லிவிட முடியாது.               
      
            எங்கள் ஊரில் 30-40 வருடங்களுக்கு முன்னரெல்லாம் வெள்ளிக்கிழமை தோறும் புதுக்கோட்டை சந்தையன்று கரும்பை வெட்டி கட்டை வண்டியில் ஏற்றிக் கொண்டுபோய் விற்றிருக்கிறார்கள். என் தாத்தா ஒருமுறை இரவு சாப்பிட்டால் செலவாகுமென பஃப்ஸ் வாங்கி சாப்பிட்டு விட்டு தண்ணீரைக் குடித்து விட்டு பனியில் கட்டை வண்டி நுகத்தடியில் படுத்திருந்தாராம். நடு சாமத்தில் கெண்டைக் காலை பிடித்துக் கொண்டதாம். அந்த வலியோடு வீடு திரும்பியிருக்கிறார். இன்னொரு முறை கரும்பு சுத்தமாக விற்கவே இல்லையாம். திருவப்பூரில் லக்ஷ்மி ஜவுளிக் கடை ஓனர் நாகையா ஒரு ஓட்டை சைக்கிளில் வந்து, 'என்னடா..விக்கெவே இல்லையா? கொண்டு போய் என் வீட்ல இறக்கு. நான் வித்துத் தர்றேன்' என்றாராம். அவரின் மகன் வீட்டில் படுக்கக் கூட இடமில்லை இறக்கக் கூடாது என்று சொல்லிவிட்டாராம். பின் நாகையா வந்து வீட்டினுள் இறக்கிவைத்து, ஜவுளிக் கடையில் கூறு போட்டு விற்றுக் காசு கொடுத்தாராம். 

             சில நேரங்களில் அதிக வருமானம் கிடைக்கலாம். ஆனால் பல நேரங்களில் மண்ணைக் கவ்வ வேண்டியிருக்கிறது. ஆனால் வியாபாரிகளுக்கு இது வந்தா மலை போனா மயிர் என்பது போலதான். அவர்கள் அதிகபட்சம் இது மட்டுமே வருமானம் இல்லையெனும் சூழ்நிலையில் சமாளித்து விடலாம். ஆனால் அவர்களுக்கும் நஷ்டம் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

        லாட்டரி சீட்டும் கரும்பு வியாபாரமும் ஒன்று என்பார்கள்.  

        கரும்பு வயலில் விற்காமல் இருப்பது ஒருவித அவமானமாக விவசாயிகள் கருதுகிறார்கள். கரும்பு வெட்ட ஆகும் செலவு, வண்டிக்கூலி, ஆள் கூலி என  இவ்வளவு கஷ்டம் ஏன் பட வேண்டும் என்பதாலேயே வந்த விலைக்கு வியாபாரியிடம் விற்று விடுகிறார்கள் விவசாயிகள்.  
            
       எங்கள் வயலில் கரும்பு ஒரு கட்டு 140 என்று வியாபாரிகளிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் வெளியில்  300க்குக் கூட விற்றிருக்கலாம். ஆனால் பஞ்சப்பாட்டு பாடாமல் பத்து ரூபாயையும் லாபமாகக் கருதுவதே புத்திசாலித்தனம்.

        கரும்பு இந்த வருடம் வியாபாரிகளை ஏமாற்றி விடவில்லை. ஜல்லிக்கட்டு அறிவிப்பும் ரேஷன் கடை கரும்பும்  இதற்கு காரணமாக இருக்கலாம்.நகரத்தில் இருப்பவர்களுக்கு இந்த வருட கரும்பு விலை நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் மோடி பொங்கலன்று மன்னிக்கவும், தைப்பொங்கலன்று  சற்று மந்தமாகவே வியாபாரம் இருந்தது.(மோடி பொங்கல்தான் மோசம்போயிடுச்சே)

        அடுத்த வருடம் என்ன நடக்கும் என்று எவனுக்கும் தெரியாது. வேணுமென்றால் நடந்த பிறகு சொல்லலாம்.
         
மேலும் சில புகைப்படங்கள் 
  

    முருகையா. என் தாத்தா. 


                 
                   சுப்பிரமணியன். கோட்டையூர். நல்ல மனிதர். இவரிடம்தான் நான் முதன் முதலாக பேரம் பேசி கட்டு 140 என  1000 கரும்பு விற்றேன். நல்ல அனுபவம். இவர் சிங்கப்பூரில் போர்மேனாக இருந்தவர். அவர் தலையை பார்த்தாலே கண்டறிந்து விடலாம். இப்போது டாடா ஏஸ் ஓட்டிக்  கொண்டிருக்கிறார். இவர்  சாமியாடி. 'சாமி என்னை அங்கே இருக்க விடவில்லை, அதான் வந்துட்டேன்' என்பார்.
         

      கரும்பை பாதுகாப்பதற்காக அறுவடைக் காலத்தில் உருவாக்கப்படும் தற்காலிக கட்டில் குடில். உள்ளிருப்பவர் என் மாமா பழனிச்சாமி.
     இதனுள் ஓர் இரவு 3 மணி நேரம் இருந்தது அற்புதமான அனுபவம். துணையிருந்தது ஒரு போர்வையும் ஜேசுதாஸின் குரலும்.     

  பணியாறிய பின் பனியாரம். டீயுடன். 



      மாமரத்தடியில் மதிய உணவு.


              தனசேகரும் ரக்ஷனாவும். 

   
        முருகன். கொத்தனார். இவரின் இன்னொரு தொழில் வயிரை       புண்ணாக்குவது.  கரும்பு கட்டு கட்டுவதில் வல்லவர்.


   கரும்பங்கொல்லை பொம்மையுடன் சரவணன். குடும்ப நண்பர். புகைப்படம் எடுக்க Samsung Grand கொடுத்து உதவியவர்.



     அறுவடைக்குப் பின். மீதியுள்ளவை அடுத்த தலைமுறைக்கு.


வேற யாருமில்ல.....











































Thursday, December 3, 2015

மணவாழ்க்கையின் தாத்பரியம்

       

 முழுமையான சண்டை
 முதல் கோபவார்த்தையுடன் 
 நிறுத்திக் கொள்வது.

 முழுமையான மகிழ்ச்சி 
 இதற்கு எதிர்ப்பதம்!

 இரண்டும் முழுமையடைகையில் 
 முழுமை பெறும்!

Saturday, September 26, 2015

இற்றுப்போன மோட்டுவளை

                                           
                    சாமணத்தில் மாட்டிய கமுகு விதை
                    பேருந்தில் செல்லும் பெண்!
                    என் அணங்கு மகள் நாளை?
                    அச்சத்தில் கண்ணுகுக்கிறது மனம்.

                    கையடக்கம் அதனுள் அடக்கம்
                    அடக்கம் அலைபேசிக்கு மட்டும்
                    ஒழுக்கம் தகர்ந்தது அடக்கத்துள்.         
                    படிக்கிறாள் ஈட்டுகிறாள் இறும்பூதாதே
                    விடியற்காலையில் விழிக்காத பெண்.
 
                    வியர்வை பூத்தக் காசில்
                    சிருங்காரச் செலவுகள்.
                    வதுவைக்கென்ன அவசரம்
                    வயதுக்கு வருவதற்குள்!
 
                     மைதுனம் நோக்கும் மையல்
                     காதல் பின் கருக்கலைப்பு!
                     வௌவியம் தோற்றது வாசெலினிடம்.
                     இறுதிவாய்ப்பென பற்றிக்கொண்டீர்
                     வந்தேறியவனின் பண்பாட்டை.
               
                     தூக்கிவிட ஆளில்லை!
                     'அடி'த்தவனையல்ல அடிபட்டவனை
                     இருக்கிறது பதவியில்
                     மதுக்கடையும் சாதிச்சங்கமும்.

                     கற்பளித்தது கற்பழிக்கிறது
                     மசக்கையல்ல அரச பிளவை;
                     விழவிருக்கும் வெம்பிய காய்.        
                     புண்பட்டது பண்பாடு
                     விழுப்புண்ணல்ல அழுகிவிட்டபுண்!
                     சிரிக்கியில்லனா கிறுக்கி பண்பாடே
                     பண்படு.

                     --------------------------------------------------
                     இப்படைப்பானது என்னால் "வலைப்பதிவர் திருவிழா - 2015" மற்றும் "தமிழ் இணையக் கல்விக்கழகம்" நடத்தும் "மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015"க்காக  "வகை 4 - புதுக்கவிதைப் போட்டி" என்ற பிரிவில் எழுதப்பட்டுள்ளது.
               
                    இப்படைப்பானது வேறெங்கும் வெளியானதல்ல, முடிவு வெளிவரும் வரை  வேறெதிலும் வெளிவராது என உறுதியளிக்கிறேன்.
                                                                                                             
                                                                                                               ச.நடராஜன்.
                   
                     

Thursday, July 10, 2014

IF YOU DO FIRST AID, YOU ARE A SECOND GOD

                                
                                                                     
          NOTES BEFORE FIRST AID
                   Before the first aid you don't commotion or shiver. Active with your common sense and boldly. Feel your important duty. In first aid, Dont's are importance one than Do's. Don't use cinema's first aids. These are almost lie. Do help, Don't hindrance.      

FIRST AID FOR HEART ATTACK
           Nowadays, 18 or 23 old persons have been attacked by Heart attack. Symptoms are pain in chest, shoulder, leg, arm, jaw or chin. These pains are happened in left side parts only. Todays Heart attack kills in the first time(Massive attack).
         If you have suddenly attack when any persons are not near to you. You have conscious for 2 mins. So do breath slowly and cough strengthly for 2 mins. This will work 40%.  That is controlled heart and blood circulation.
        In first check the pulse of the patient in left hand below the wrist in left side. If the patient haven't breath and have pulse. Then check the breath. If patient have pulse only, Give air to the patient through the mouth by your mouth. Early to do this, patient's jaw is must be as perpendicular. If the patient haven't pulse and breath, Don't hope to he is dead, patient's brain is worked for 5 mins. Immediately, keep Asprin 150mg or ecosprin 150mg (very cheap) to the patient between the front below lip and tooth.Because if sucks, it works speedly. Suppose you haven't these tablets, give paracetamol, that is equal to 30% to those tablets. And keep your left hand palm in his cetre of the chest as perpendicularly. Then, keep the right hand palm on your left hand. Put right hand fingers between the left hand fingers and fold. Press hardly 60 times per min. When press, count 1001,1002,.... Because it should be maintain in the particular gap. This process will stop, the patient will dead in 5 mins. So do this two members alternatively.(Continuous Chest Compression - CCC).
                                  
      The patient don't return to the conscious mind, don't stop this. After return to conscious mind, don't lay down in flat surface. Must be sit and lean.
      Keep those above tablets everytime. Heart attack is occured mainly by stress. So, be cool everytime and don't angry.
               To see how to do CCC     www.youtube.com/watch?v=EcbgpiKyUbs
        FIRST AID TO SINK PERSONS IN WATER
              If any persons sink in water , don't contact him face to face. Because they will pull also you to inside the water. Many persons has been doing this wrong act. Pull him leg only. Check the pulse. To release the water from the patient body, Don't press in his stomach. If you press in stomach, drank water can go to the lungs. This very dangerous.
            He should be facing down in flat surface. And press in his back(straight to stomach).When doing this process keep the any things like towel, ball, etc., under the stomach. If the water occupied in lungs, press in his back (straight to lungs-just below to shoulders).  Don't give water to him. Cover the body by carpet because, due to covered by carpet, body keeps the ordinary temperature. Then carrying the patient to nursing home.

  FIRST AID TO SUDDENLY GIDDINESS
       Reason may to this decreased energy in the body. Don't give water. Spray  some water in the patient's face. Because, more sensitive veins are located in the face. If he is not return to the conscious state, keep his legs on the chair and body is lay down in the flat surface.(Plough shape).                              
       So, blood is going to brain and he will regain conscious as soon as. Then give energetic food.      

 FIRST AID TO ACCIDENT PATIENTS
        Don't give water is important. Because, there was a problem made during any emergency surgery. Surgeries should be doing in empty stomach. Don't shake the patient's body. If the patient have pulse but breath is stopped, immediately give air to his mouth by your mouth. If the blood releases in ear or nose, don't believe as the patient should be not alive. In this cases 80% chance to will rescue the patient. Keep the moisture cloth in between the shoulder and ear. The blood leaks in left ear, moisture cloth should be kept in between left ear and shoulder( like as mobile talking during bike driving). Because, If blood leaks in left ear, the head lean in right side, the blood made clots in brain. Due to using moisture cloth is controlled the air easily enters the blood.
       Suppose the patient feel as dizziness and vomit due to attacked in head. The reason of this feeling is a blood clot appeared in his head. In this cases, if the patient was not be treated, he will dead in 3 months. Don't think is ordinary effect.
      If the hand is breakdown, bind the hand by moisture cloth between the scales or straight things. Please avoid the surgery during the fraction as for as possible. Because kept plates are made problem after. So, follow the bandage method to fractions.  

    FIRST AID FOR IMMOLATION
                                  
          Pour the water in the patient's body. Don't give water to drink to reduce the latent heat. To reduce the heat, cover the body by using plantain leaves. Make air settings near to the body.
        Apply the Silver X ointment in the patient's body. Then carrying to the hospital.

    FIRST AID FOR FITS
            Close the patient's ears and plait the legs; during do this, the patient should be lay down as lean towards one side in the surface. This control the foam to enter the throat.Don't give iron, key or shoes to breath. To control the bites tongue, put a pencil or pen  between tooth.
                                                                         Nimhans hospital in Bangalore is the best hospital to cure the fits.    

   FIRST AID FOR SHOCK
             Immediately remove the patient from the current source using like news papers, plastic chair, brooms. If you near to the main switch, switch off that. In some places pull the patient using printed plastic papers like as glow. Because , If the patient in the 3rd floor window, you would pull him, he will injured. So, consider the patient's body hurt during rescue.
         If the patient have pulse and haven't breath, give the air to the patient.

  FIRST AID FOR ORDINARY HURTS
         To the ordinary hurts, press in injured place using by dry cloth. Don't suck the blood. Apply any substances like clay, cement, headache balms, grease, powder of expired tablets, etc., Apply the Nepasulf or soframycin ointment in injured place.
        For stab wounds, don't release the stabbed things. Because more blood will released outside. Bind around the stabbed thing using moisture cloth and don't shake the stabbed thing. Then going to hospital.

   FIRST AID FOR POISONED PATIENTS
        Poison is injected to human body by three ways. The poison inject through Skin, Nose, and Mouth.
   THROUGH NOSE
         Poisoned air breath leads to die. In this case, the patient will die in 2 mins.
         During the well digging, leaks the poisoned gas. And the workers are going to unconscious stage. To assure gas leak, should be a candle is lower down to inside the well using pulley. After 2 mins pull out the candle, if the light was offed, there was hasn't oxygen.
         To rescue them, bind your nose and mouth using moisture cloth and save them. This works upto 15 mins.This moisture cloth worked as a filter. Also other gas leakages follow this method. Important one is keep the cloth with moisture.                    
  THROUGH MOUTH
           Try to vomits the patient. Give salt solution. Don't give soap, tamarind, clay solutions, etc.,  
           The poison was acid. So give the mixture grains should be powdered and include water called as grain paste. It is acts as base. So this made the equillibrium in stomach.  Give the rice paste in the inability stage.          
   THROUGH SKIN
         Any insects like centipede, spider and reptiles like snakes, etc., bitten you, you will try to be relax.Don't run and shiver. Most snakes are haven't poison. If you have fear, you heart  is pulsed speed. This is more danger than the poison. So be cool. During this time, trembling  or commotion will kills.  
                              
         Clean well the injured place. And tear the bitten place as lengthwise. Then apply the pottassium permanganate(KmNo4)on the bitten place. It is release the poison from the blood. Rope tightly above the bitten place. The bandage is must be bind in the one boned part of the body. One boned parts are Fingers, Upper arms and Thigh. These parts has one bone and round shape. Suppose you bind in the above wrist, the poison will mixed with blood. Because that is not round shaped part.        
                     
         Bitten by animals : Horse, Dog, Rat, Cat bites leads to rabies. There was no treatment to rabies. How to find rabid dogs?   These eyes are in red colour, ugliness and have hydrophobia and lightophobia.            
                        
If these bitten you, you will die in 30-50 days, suppose without treatment.
                          
        Also for animal bits, Similarly apply the KmNo4 after the tearing and cleaning. Important one is inject the rabies vaccine within two hours. If you grow a dog, inject the rabies vaccine per one year. Don't grow the dogs and cats in the house as for as possible. Because, dog's saliva and hair are very dangerous.
              
         And keep the dog with alive for 15 days. Because, either the dog will die upto 15 days, assured that is rabid dog or the dog will alive, that is normal. The rabid dog's saliva will dried during the bit. So it was dead.

DON'T GIVE WATER TO DRINK FOR BELOW THESE 5 PATIENTS
      Immolation,
      Strong injured in head and high blood release,
      Strong injured and high blood release,
      Heart attack,
      Unconscious state,
                Because, these patients are almost going to unconscious state. So his food pipe was closed by epiglottis and wind pipe was opened. So the water will going to lungs.
                           These instructions are given by Mr. RUPESH KUMAR, Sathya Sai Institute, Chennai, at NSS meetting in Sudharsan Engg. College, Sathiyamangalam, held on 6,July,2014. He is desired to teach these for family members and others. You learned these is not big deal, Teach these to others.