Saturday, March 12, 2011

Annual Day Celebrations 2010-11

                            அரசு  உயர்நிலைப்பள்ளி   எல்லைப்பட்டி 

   
      எங்கள்   பள்ளியில்   இலக்கிய   மன்ற  விழா,  விளையாட்டு   விழா, ஆண்டு   விழா   ஆகிய    முப்பெரு  விழா  13.3.11 அன்று   3 மணியளவில்  நடைபெற்றது. தமிழ்த்தாய்   வாழ்த்துடன்   இனிதே   தொடங்கப்பட்டது. மாணவர்களின்   நடனம்   கண்களைக்   கவர்ந்தது . தமிழாசிரியர்   திரு.ஆரோக்கியராஜ்   ஆண்டறிக்கையை   வெளியிட்டார்.  புலிகளாக   மாறிய   புழுக்கள்   என்னும்  தலைப்பில்   மாணவர்கள்   நடித்த  நாடகம்  மனதிற்கு  மகிழ்ச்சியை   தந்தது . பள்ளிக்கு   சிறப்பு   விருந்தினர்கள்   பலரும்   கலந்து   கொண்டனர் . மாணவர்களுக்கு    பரிசளிப்பு    முடிய   எம்   பள்ளியில்   சென்ற  வருடம்  அதிக   மதிப்பெண்  பெற்றவர்களுக்கு   பரிசு   வழங்கப்பட்டது .இறுதியாக   மாணவர்களின்    நடனம்    கண்களைக்  கவர்ந்தது .  திரு .  பாலசுப்ரமணிபாரதி   அவர்கள்  பத்தாம்   வகுப்பில்  மாவட்ட  அளவில்  ம்முதலில்    வரும்   மாணவர்களுக்கு  5 கிராம்  தங்க   நாணயமும் , மாநில   அளவில்   முதலிடம்   வரும்   மாணவர்களுக்கு  10 கிராம்    தங்க  நாணயமும்   தருவதாக   அறிவித்தார் .இறுதியாக   ஆசிரியர்களுக்கு   ஊக்கத்தொகை   வழங்க , தேசிய   கீதத்துடன்   விழா   இனிதே   நிறைவேறியது .


  இவ்வாறு   தெரிவிப்பது   ப .முத்துக்குமார் ,  10 ஆம்  வகுப்பு , அரசு  உயர்நிலைப்பள்ளி  எல்லைப்பட்டி .

  
                                                   முப்பெரும்  விழா
                    பரிசுகள்  அள்ளும்  விழா
                   உற்சாகம்  எழும்  விழா 
                   கலை தாகம்  தீர்க்கும்   விழா
                   அதுவே  நமது  ஆண்டு விழா 
        
                 வீரம்    காட்டும்  விழா 
                விவேகம்  இருக்கும்  விழா 
               வெற்றிகளை விரும்பும்  விழா 
                அதுவே விளையாட்டு  விழா 

                இலக்கியம்     காட்டும்  விழா 
                புதிதாய் இனிக்கும்  விழா 
                ஆசையை  அதிகரிக்கும்  விழா 
              அதுவே  இலக்கிய   மன்ற    விழா
  கவிதை  செ. சதீஸ்   10 ஆம்  வகுப்பு  அரசு  உயர்நிலைப்பள்ளி  எல்லைப்பட்டி.



 மாணவர்கள் 
 PTA தலைவர்
  
கல்விக்குழு  உறுப்பினர் 
திரு.தாமரைச்செல்வன் ,
திருமதி.சண்முக வள்ளிக்கு மரியாதை செய்யப்படுகிறது.   
வழக்கறிஞர்  யோகமலர் அவர்களுக்கு மரியாதை  செய்யப்படுகிறது. 
கல்விக்குழு  உறுப்பினர் அவர்களுக்கு  மரியாதை  செய்யப்படுகிறது.
மாணவர்கள் 
ஆண்டறிக்கை  வாசிக்கப்படுகிறது.
நடனம் 
மாணவர்   பரிசு பெறுகிறார் 
நான் பரிசு பெற்றபோது 
தலைமை ஆசிரியர் பரிசு வழங்குகிறார்
தலைமை ஆசிரியர் உரையாற்றுகிறார் 
மாணவர்கள் நடனம் குற்றால  குறவஞ்சி 

No comments:

Post a Comment