Thursday, October 28, 2010

Aung san suu kyi


                                                                            

 1947ம்  ஆண்டு  மியான்மரின் (பர்மா)  விடுதலைக்கு  வித்திட்டவர்களில் ஒருவரான ஜெனரல் ஆங் சான் சூகிக்கு  2  வயதே ஆகியிருந்தது.
      ஜெனரல் ஆங் சான் பிரிட்டிஷ்  காலனி ஆதிக்கத்திடமிருந்து மியான்மாரை மீட்க  பாசிஷத்திற்கு எதிரான மக்கள்
விடுதலைக்கு  குழுவிற்கு  தலைமையேற்று  நடத்திச் சென்றார். அந்த  சமயத்தில்  சூகியின் தாயார் இந்தியாவில் மியான்மாரின் தூதராக  நியமிக்கப்பட்டார். எனவே  சிறுமியாகிய சூகி புதுதில்லியில் உள்ள ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டார்.  
                                                            
                                               
இங்கு தான் அவருக்கு அகிம்சையின் மீது  தீவிரமான பற்று ஏற்பட்டது . இது மகாத்மா காந்தியின் உன்னத கோட்பாடுகள்
மீது கொண்டிருந்த ஈர்ப்பினால் உருவானது. அவர் டெல்லியிலுள்ள ஸ்ரீராம் கல்லூரியிலும், பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றார். பிரிட்டனைச் சேர்ந்த திபெத் நாடு பற்றிய ஆய்வாளர் மைக்கேல் எரிஸ் என்பவரைதிருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு  பின் தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் அங்கேயே தங்கிவிட்டார்.
                                                           
   1991 ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
                                               
      அவரது நேர்மை, காந்திய வழி ஆகியவை  மியான்மாரின் நம்பிக்கைக் குரலாக ஒலித்தது.1995ம்  ஆண்டு  முதல் சூகி பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு,  விடுவிக்கப்பட்டிருக்கிறார்.  இன்னும் அவர் சிறையிலேயே உள்ளார்.    
                                                        

ஆங் சான் சூ கி நவம்பர் 10,2010 அன்று வீட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
         அவரது National League Democracy இன்று பர்மாவை ஆண்டுகொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment