Friday, February 4, 2011

Olive Ridley


ஆலீவ்  ரிட்லி என்பன யாவை?
       ஏழுவகையான  கடல் ஆமை இனங்களிலேயே ஆலிவ்  ரிட்லி தனித்துவம் வாய்ந்தது.இவை கடல் சூழல் மண்டலத்தில்  முக்கிய பங்கினை  ஆற்றுகின்றன. சென்னை மற்றும் ஒரிசா கடற்கரைகளில் மட்டுமே இவை கூடு  கட்டுகின்றன. சர்வதேச  இயற்கை பாதுகாப்பு  அமைப்பு இவற்றை  அழிந்து வரும் இனம் என குறிப்பிட்டுள்ளது.
         ஆலிவ் ரிட்லிக்கள் தம்  பிறந்த அதே கடற்கரைக்கு மிகச்சரியாக  திரும்பி முட்டையிடும்  பழக்கமுடையவை. இவற்றின் மூளையிலுள்ள மேக்னட்டைட்  எனும்  ஒரு  இரும்பு  ஆக்சைடின்  உதவியால் புவியின் காந்தப்புலத்தை இவை புரிந்துகொள்கின்றன. இந்த  சிறப்பியல்பினாலேயே இவை தாம் பிறந்த கடற்கரைகளை  சரியாக  கண்டுபிடிக்கின்றன.
         வன உயிர் பாதுகாப்பு  சட்டத்தின்படி இவை பட்டியல்  ஒன்றின் கீழ் வருகின்றன. இது இவற்றிற்கு இந்தியாவில் மிக உயர்ந்த  பாதுகாப்பை  அளிக்கிறது.  நமது  தேசிய விலங்கான  ராயல் பெங்கால்  டைகர்  மற்றும்  கிர்காடுகளில்    காணப்படும் ஆசிய சிங்கத்திற்கும்  தரப்படும் பாதுகாப்பு ஆலிவ் ரிட்லீக்கும்  தரப்படுகிறது.
         தங்களுடைய  வாழ்விடங்களை  இவை இழந்து  வருகின்றன. மனிதர்களுடைய செயல்பாடுகளால் இவை  பாதிக்கப்படுகின்றன.  இந்த   காரணங்களினால்  இவை அழிந்து  வருகின்றன.
         மீன் பிடித்தலே  இவற்றை  மிரட்டுகின்ற மாபெரும்  அச்சுறுத்தல்  ஆகும்.  நன்கு வளர்ந்த  ஆலிவ் ரிட்லிக்கள் மீன்பிடி படகுகளின் உந்துக்  கத்திகளில்  சிக்கி  இறக்கின்றன.  மேலும்  சில மீன்  வலைகளில் மாட்டிக்கொள்கின்றன.
       ஒவ்வொரு  நாற்பது  நிமிடங்களுக்கும்  ஒருமுறை  இவை நீர்மட்டங்களுக்கு  மேலே  வந்து  சுவாசிக்க வேண்டும்.  ஆனால் வலைகளில்  மாட்டிக்கொள்வதன்   மூலம்  இவ்வாய்ப்பை   இழக்கின்றன. இதனால் மரணத்தை  தழுவுகின்றன.கடற்கரைகளில் இவை கூடுகளில்  வசித்தாலும் இவற்றின்   முட்டைகள் பல்வேறு  விதமான  அச்சுறுத்தல்களை சந்திக்கின்றன.
 வன   உயிர்ப்   பாதுகாவலர்கள்     என்ன   செய்கிறார்கள்?      ஆமை   முட்டைகளை பாதுகாப்பதையே   முக்கிய   நோக்கமாக    கொண்டிருக்கிறார்கள்.

      
         வன  உயிர்ப்   பாதுகாவலர்கள்     கடற்கரையில்     ஆமைகளை      கண்டறிகின்றனர்.       இதற்கு      பிறகு   பயிற்சி  பெற்ற   தன்னார்வத்    தொண்டர்கள்    மிக   கவனமாக     முட்டாள்களை    வெளியே   எடுத்து   பொரிப்பான்களில்    வைக்கின்றனர் . 
   
        கடல்     மணலினால்    செய்யப்பட    ஆமைக்கூடுகளை     மிகச்சரியாக     பிரதிபலிக்கின்ற     பொந்துகளில்   இம்முட்டைகள்    இடப்படுகின்றன.     பிறகு   இவற்றின்   வெப்பநிலை     கண்காணிக்கப்பட்டு    பராமரிக்கப்படுகிறது.   
 முட்டைகள்    பொறியும்    வரை    இக்கன்காணிப்புத்   தொடர்கிறது . இந்த    மிதமான    வெப்பநிலை     ஆமைகளின்    பாலை      நிர்ணயம்     செய்கிறது.   வெப்பம் ஆண்குஞ்சுகளையும்  மிதவெப்பம்    பெண்குஞ்சுகளையும்     உருவாக்குகிறது.

      சூடான     ஆண்கள் ,   மிதமான     பெண்கள்      என   கண்ணைச்  சிமிட்டுகிறார்கள்     வன    உயிர்ப் பாதுகாவலர்கள்.

      இக்குஞ்சுகளை   கடற்கரையின்     பரந்த    பரப்பில்    வேறுபட்ட   இடங்களில்  கடலுக்குள்    செல்ல    அனுமதிப்பதன் மூலம்  வேட்டையாடும்    விலங்குகளின்  தாக்குதலில்    இருந்து    தப்பிக்கின்றன.

மொழிபெயர்ப்பு    ச. நடராஜன்   மூலம் தி ஹிந்து



                                                                                              

No comments:

Post a Comment